Skip to main content

"சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை; ஆதாரம் உள்ளது" - அமைச்சர் மனோ தங்கராஜ்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 'Minors are not employed; there is evidence'-Minister Mano Thangaraj

 

அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதன் காரணமாக அங்கு பணியில் அமர்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட சிறார்கள் தங்களுக்கு ஊதியம் தரவில்லை என நேற்று ஆவின் வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஒன்றரை மாதங்களாக அங்கு பணியாற்றி வந்த சிறார்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி சிறார்கள் உட்பட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகத் தகவல் வெளியானது போலியானது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறைச்சிக் கடையில் குழந்தை தொழிலாளர் சிறுவன் மீட்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Rescue of child labor boy in butcher shop

இறைச்சிக் கடையில் குழந்தை தொழிலாளியாக சிறுவன் அமர்த்தப்பட்ட நிலையில், குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு சூளை பாரதி நகரில் சத்தியமங்கலம் பிரதான சாலையில் உள்ள கறிக் கடையில், சிறுவன் பணியில் இருப்பதாக 1098 என்ற குழந்தைகள் ஹெல்ப் லைன் எண்ணிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் 14 வயது நிரம்பாத சிறுவன் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் 6ம் வகுப்பு வரை மட்டுமே பயின்று பள்ளியிலிருந்து இடைநின்ற சிறுவன், பல மாதங்களாக இறைச்சிக் கடையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தது உறுதியானது. இதையடுத்து சிறுவனை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு அழைத்துச் சென்றனர். சிறுவனை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

“11 டன் பால் பவுடர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் மனோ தங்கராஜ்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
11 tonnes of milk powder has been distributed Minister Mano Thangaraj

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் பால் பவுடர் விநியோகம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் வழக்கமாக வினியோகம் செய்யும் பால் வினியோகம் செய்யப்பட்டு, கூடுதலாக நேற்று 12.5 டன் பால் பவுடரும் இன்று 11 டன் பால் பவுடரும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வினியோகம் செய்ய போதுமான அளவு பால் பவுடர் கையிருப்பு உள்ளது. மேலும் பால் பவுடர் தேவைப்படுபவர்கள் ஆவின் விற்பனை நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.