தமிழ் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமை நாள் விழா சென்னை சாந்தோமில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில்சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்கலந்துகொண்டு, சிறுபான்மையினர் உரிமை நாள் உறுதிமொழி ஏற்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.