Minority Commission hearing postponed

Advertisment

தமிழக சிறுபான்மையினருக்கான தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களைக் கேட்டறியவும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலைவர் டாக்டர். மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வருகை தருவதாக இருந்தது.

தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. எனவே தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.