சென்னையில்17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்த ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 Minor marriage  Stopped by auto driver in chennai

சென்னை அயனாவரத்தில் திக்காகுளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன். கடந்த ஞாயிறு அன்று அவரது மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு புறப்பட்டு சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

 Minor marriage  Stopped by auto driver in chennai

Advertisment

 Minor marriage  Stopped by auto driver in chennai

அப்பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்ததால் ஏற்பட்ட வன்மம் காரணமாக அவர் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலனை வெட்டி கொன்றதாக எழும்பூர் நீதிமன்றத்தில் இரண்டுபேரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் இரண்டு பேரும் என மொத்தம் நான்கு பேர் ஆஜராகினர்.

 Minor marriage  Stopped by auto driver in chennai

Advertisment

மேலும் அந்த நால்வரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவர இந்த கொலைக்கு திட்டம் வகுத்த அந்த சிறுமியின் தாயும் அந்த சிறுமியை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த இளைஞரான வினோத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.