மதுரை அருகே மைனர் சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்

Advertisment

madurai

மதுரை கூடல்நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தாய் தந்தையோடு வசித்து வரும் மைனர் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வீட்டிற்கு அருகேயுள்ள ஹரி என்ற நபர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

Advertisment

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், மைனர் என்றும் பாராமல் அவசர அவசரமாக முத்துப்பாண்டி என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதற்கிடையே உடல்நலக்குறைவு காரணமாக சிறுமியின் உடல் நிலையை பரிசோதிக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. முழு வளர்ச்சி இல்லாத சிறுமி என்ற அடிப்படையில் மருத்துவர்கள் சந்தேகம் கொண்டு விசாரித்தபோது, அவர் மைனர் என்பது தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் சிறுமியை கர்ப்பமாக்கிய ஹரி மற்றும் மைனர் என்று தெரிந்தும் சிறுமியை திருமணம் செய்துகொண்ட முத்துப்பாண்டி ஆகியோர் மீது கூடல்புதூர் போலீசார் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இச்சட்டத்தின் கீழ் முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி இருக்கும் ஹரியை போலீசார் தேடி வருகின்றனர்.