/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm3455_1.jpg)
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள்'சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வகையில் 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் மூலம் ஈரானில் சிக்கித் தவித்த 681 தமிழக மீனவர்கள் ஜூலை 1- ஆம் தேதி தாயகம் திரும்பினர்.
இந்நிலையில், ஈரானில் மேலும் 40 தமிழக மீனவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த மாதம் சென்ற கப்பலில் இடம் இல்லாததால் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் 40 பேரையும் விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்" எனவலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)