Ministers who rode the boat!

Advertisment

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் உள்ள வேட்டைக்காரன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த 'அம்மா மினி கிளினிக்'கை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (19/02/2021) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், குத்துவிளக்கு ஏற்றிவைத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மினி கிளினிக்கை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து ரூபாய் 5.37 கோடி மதிப்பில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்திரா நகர் குளம் படகு சவாரி மற்றும்சிறுவர் விளையாட்டுப் பூங்காவையும் திறந்து வைத்தனர்.

மேலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் குளத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், அந்தியூர் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.