Published on 27/08/2023 | Edited on 27/08/2023

மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. உடனே பணியில் இல்லாத அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், நடமாடும் மருத்துவ வாகனத்தின் ஓட்டுநரும் அந்த சமயத்தில் பணியில் இல்லாதது தெரியவந்தது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.