/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gold-chariot.jpg)
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில், பழுதடைந்திருந்த தங்கரதம் புனரமைக்கப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, நேற்று (15.12.2021) மாலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் அம்பாள் தங்கரதத்தில் எழுந்தருளி - தங்கரத உலா நிகழ்ச்சி - திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.
அதன்படி, திருச்சி சமயபுரம் கோவில் தங்கரதம் பழுதடைந்திருந்த நிலையில், அது மீண்டும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று மாலை கோவில் வளாகத்திற்குள் பவனி வந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாரியம்மன் கோவிலில் தங்கரதம் தயாரானது, பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் தயாரான தங்கத்தேரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டவர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கத்தேர் பிரகாரங்களைச் சுற்றி வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)