திமுக எம்.பி. மகன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) 

புதுச்சேரியில் நிகழ்ந்த வாகன விபத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி.யின் மகன் உயிரிழந்தார். புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பும் பொழுது தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராகேஷ் என்ற 22 வயது இளைஞர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த ராகேஷ் திமுக மாநிலங்களவை எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் என்பது தெரியவந்தது. இவரது உடலுக்கு திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்கள்
Subscribe