Ministers paid their respects by garlanding Anna statue

Advertisment

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு கட்சியின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், இனிக்கோ .இருதயராஜ் ,கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.எம்.ஆனந்த்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்கள்.