Ministers open Avin Deepavali special camp

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை முகாமினை இன்று பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், மற்றும்மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.

அதன்பிறகு திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்குப் பால் பணம் பட்டுவாடா செய்தல், ஆவின் இப்கோ கிசன் நிறுவனம் இணைந்து பால் உற்பத்தியாளர்களுக்குக் கால்நடை பராமரிப்பு குறித்த ஆலோசனை மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை உள்ளிட்ட சேவைகள், சி மற்றும் டி பணியாளர்களுக்கான தீபாவளி போனஸ் வழங்கும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், ஆவின் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.