
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின்பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள அதிமுகஅமைச்சர்களின்அறையில் இருக்கும்பொருட்களை அப்புறப்படுத்தும் பணிதற்பொழுது நடைபெற்று வருகிறது. அதேபோல் அமைச்சர்கள் அறைகளில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல், பெயர்ப் பலகையில்உள்ள அமைச்சர்களின்பெயர்களை அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Follow Us