Advertisment

அமைச்சர் திறந்து வைத்த பிளாஸ்டிக் அரவை மிஷின் ஒருவாரத்திலேயே பழுதானது!

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், மதுரையைச் சேர்ந்த டபிள்யுடூடபிள்யு என்ற தொண்டு நிறுவனம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் மூலம் நிதி உதவிபெற்று பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் அரவை இயந்திரம் மிஷின்கள் வாங்கப்பட்டது.இந்த மிஷின்3,50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் அரவை மிஷினை திண்டுக்கல் மாவட்டத்தில் 30 இடங்களில் வைத்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருக்க இருந்தனர்.

Advertisment

 The Minister's inaugural Plastic Half Machine repair In One Week!

அதன்அடிப்படையில்தான் முதன்முதலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பஸ்ஸ்டாண்டு, ரயில்வே நிலையம், மாநகராட்சி அலுவலகம் இப்படி ஐந்து இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் அரவை மிஷின்களை வைத்தனர்.

Advertisment

இப்படி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் அரவை மிஷினை முதன்முதலாக கடந்த 21ம்தேதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பஸ் ஸ்டாண்டில் திறந்து வைத்தார். அப்போது ஒருலிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் கேனைஅந்த மிஷினில் போட்டால் அந்த கேன் அரைபட்டு துகள்களாக வருவதைகண்டு கலெக்டர் விஜயலட்சுமி உள்பட அதிகாரிகளை பாராட்டி விட்டும் சென்றார்.

 The Minister's inaugural Plastic Half Machine repair In One Week!

அதைத்தொடர்ந்து மற்ற இடங்களிலும்பிளாஸ்டிக் அரவை இயந்திரம் மிஷின்களை திறந்தனர். அதனடிப்படை யில் பொதுமக்களும், பிளாஸ்டிக் கேன்களை அந்த மெஷினில் போட்டு சென்று வந்தனர். இந்தநிலையில் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்துவிட்டு சென்ற பிளாஸ்டிக் அரவை மிஷின் திடீரென பழுதாகிவிட்டது. இப்படி ஒரு வாரத்திற்குள்ளேயே மிஷின் பழுதானது அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே மெக்கானிக்களை அனுப்பி அந்த மிஷினை பழுதுபார்க்க உத்தரவிட்டனர்.

அந்த மிஷினில் உள்ள மோட்டார் பழுதாகிவிட்டதால் அதற்கு பதில் புதுமோட்டாரை பொருத்தினார்கள்.புதிதாக வாங்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் அரைவைமிஷின் ஒருவாரத்திற்க்கு கூட மக்கள் பயன்பாட்டுக்கு வாராமல் பழுதானது என்பதால் எந்த அளவிற்கு தரம்மில்லாத மிஷினை வாங்கி இருக்கிறார்கள் என்ற பேச்சும் மக்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.

Plastic dindugal seenivasan Dindigul district
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe