Advertisment

அமைச்சரின் இல்லவிழா; இ.பி.எஸ் போனதும் வந்த ஓ.பி.எஸ்..!

Minister’s House function; OPS who came after Palanisamy came and went ..!

Advertisment

ஆதிதிராவிட நலத்துறையின் அமைச்சரானராஜலட்சுமியின் மகள் ஹரிணி மற்றும்மருமகள் அனுசுயா ஆகிய இருவரின் பூப்புனித நன்னீராட்டு விழா இன்று காலை சங்கரன்கோவிலைச்சேர்ந்த மரம்சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலில் நடந்தது. காலை 11.15 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்குவந்தார். தென்மாவட்ட அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வந்திருந்தனர்.

அ.தி.மு.க.வின் பாணியில் நிகழ்ச்சிக்காக மாவட்டம் முழுவதிலுமிருந்து மக்கள் திரட்டப்பட்டிருந்தனர். நகரமெங்கும் கொடிகள் கட் அவுட்கள் வைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி குழந்தைகளை வாழ்த்தினார்.

அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோரும் வந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கிளம்பிப் போன சிறிதுநேரம் கழித்து ஓ.பி.எஸ். வந்தார்.

Advertisment

பாதுகாப்பின் பொருட்டு தென்மண்டல ஐ.ஜி.யான முருகன் டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு, எஸ்.பி. சுகுணா சிங் தலைமையில்,தென்மண்டலக் காவல் நிலையங்களிலிருந்து சுமார் 1,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

edappadi pazhaniswamy ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe