Advertisment

இன்று (30/10/2022) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115- வது பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில், சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. ஆகியோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.