Skip to main content

 அமைச்சர்களுக்கு விவசாயிகளை பற்றி கவலையில்லை; பணம் ஒன்றே நோக்கமாக உள்ளனர்: அ.ம.மு.க மா.செ தாக்கு

Published on 21/08/2018 | Edited on 21/08/2018
thi

 

கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை அளவுக்கு அதிகமாக மழை பெய்து அணைகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 

 

தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதங்களை தொட்டுவிட்ட நிலையிலும் இதுவரை திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஒரு போக சம்பா சாகுபடியாவது மேற்கொள்வதா என விவசாயிகள் சந்தேகத்துடனும் கவலையுடனும் இருந்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டுமென  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நிர்மல்ராஜை சந்தித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர்  மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர். 

 

இதுகுறித்து மாவட்ட செயலாளர் கமராஜ் கூறுகையில் ," 2லட்சம் கனஅடி தண்ணீர் வந்தும் கடைமடை தண்ணீர் கிடைக்காதததற்கு முக்கிய காரணம் தூர்வாராதது தான். தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் தண்ணீர் குறித்து எந்த பகுதிக்கு சென்றும் பார்க்கவில்லை. தமிழக அரசு தண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருகிறது. அவர்களுக்கு விவசாயிகளைப்பற்றி கவலையில்லை. பணம் ஒன்றே நோக்கமாக உள்ளனர்"  என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.