சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா,பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும்பிப். 8 ஆம் தேதி காலை9 மணிக்கு சசிகலாதமிழகம் கிளம்புவார்என தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே சென்றபோது அவரது காரில் அதிமுககொடிகட்டப்பட்டிருந்தது குறித்துசர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சேலம்நகர அதிமுகநிர்வாகிகள் சார்பில்போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுககொடியைசசிகலா பயன்படுத்தக் கூடாது என அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்நேற்றுஅமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர்மீண்டும் டிஜிபியை நேரில் சந்தித்துஅதிமுக கொடியைசசிகலா பயன்படுத்தக் கூடாதுஎனப் புகாரளித்தனர்.
இந்த புகாருக்கு பின் அமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்துபேசியதமிழகசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ''சொத்துகுவிப்பு வழக்கில்சிறைதண்டனைபெற்றசசிகலாசென்னைதிரும்புவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் சசிகலாவும், தினகரனும்தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர்.டிஜிபியிடம்அல்ல முப்படை தளபதிகளிடம் புகாரளித்தாலும் எங்களைதடுக்க முடியாது எனடி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பையேஅவமதிக்கும் வகையில்சசிகலா செயல்படுகிறார்.அதிமுக கொடியைசசிகலாபயன்டுதகூடாது.மனிதவெடிகுண்டாக மாறி மக்களுக்குஅச்சுறுத்தல் ஏற்படுத்தும் அவரதுசதித்திட்டத்திற்கும் அதிமுகவிற்கும்எந்த சம்பந்தமும் கிடையாது'' என்றார்.
அமைச்சர்களின் இந்தப் புகாரை அடுத்து, பொது அமைதியை பாதிக்கும் நோக்கில் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போல தங்களை பாவித்துக்கொள்வதாக காவல்துறை வெளியிட்டுள்ள திடீர் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்திரளாகக் கூடி, சட்டத்தை கையில் எடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் வகையில்ஈடுபடதிட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.