'' Ministers cannot walk on the road ... '' - Mannargudi zealot warns!

Advertisment

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என அண்மையில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ளது. அதிலும் , "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது. தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்'' என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

SAINT

பட்டின பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது எனவே அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பட்டண பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது. இதே மாதிரிதான் ஸ்ரீரங்கத்தில் கூட ஒரு ஆச்சாரியாருக்குப் பட்டின பிரவேசம் செய்யும் போது இந்த மாதிரி செய்தார்கள். பட்டண பிரவேசத்தைத் தடுக்கக்கூடிய அருகதை இந்த அரசாங்கத்திற்கும் கிடையாது, எந்த ஒரு இயக்கத்திற்கும் கிடையாது. அது நம்முடைய சிஷ்யர்கள் பண்ணக்கூடிய ஒரு பணி. அதை செய்தே தீருவார்கள். நான் மன்னார்குடி ஜீயராக சொல்கிறேன் இந்த மாதிரி தர்ம துரோகிகளுக்கும், தேச துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறோம். இந்து விரோதமான செயல்கள், இந்து தர்மத்தில் தலையீடு செய்தால் அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் நடமாட முடியாது ரோட்டில்''என்றார்.