Skip to main content

மழை வெள்ள நிவாரண பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுவரும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்! 

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Ministers and MLAs busy with rain relief work

 

கடந்த சில தினங்களாக பெய்துவந்த பெருமழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. ஓடைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்த தண்ணீர் பல ஊர்களைச் சூழ்ந்துகொண்டுள்ளது. மக்களைப் பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பரபரப்பாக செயல்பட்டுவருகிறார்கள். அந்த வகையில், ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துசென்று தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளுக்குத் தண்ணீர் நிறைந்து வடிவதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

 

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்துவருகிறார். நேற்று (21.11.2021) சித்தமல்லி டேம்  நிரம்பி 1,300 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அந்த உபரி நீர் சென்ற பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. வீதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கும் பணியில் ஈடுபட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்து கொடுத்துவருகிறார்.

 

Ministers and MLAs busy with rain relief work

 

ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் உள்ள உடையார்பாளையம் நகரில் உள்ள ரெங்கசமுத்திரம் ஏரி நிரம்பி, அதன் உபரி தண்ணீர் திருச்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஓடுகிறது. இதை நேரில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து உபரிநீர் சாலையைவிட்டு மாற்று வழியில் வடிவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்துள்ளார். இவரோடு ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன் ராஜா உடையார்பாளையம் திமுக பிரமுகர் துருவேந்திரன் உட்பட பல அதிகாரிகள் உடன் இருந்து செயல்பட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.