கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தையொட்டி பரமேஸ்வர நல்லூர் கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பிரம்பராயர் என்கிற கிராம காவல்தெய்வ கோயில் உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோயில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் குலதெய்வகோயிலாகும். மிகவும் பழமையாக இருந்த கோயிலை அமைச்சர் சம்பத் ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்து புதிய பொலிவுடன் மாற்றியுள்ளார்.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதில் அமைச்சரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.