Minister who accepted Jyoti Mani MP's request and immediately ordered!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தொடர்ந்து அமைச்சர்களைச் சந்தித்து தனது தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை குறித்து மனு அளித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை இன்று (23/08/2021) நேரில் சந்தித்த ஜோதிமணி எம்.பி., தனது தொகுதியில் நியாய விலைக்கடைகள் தொடர்பான கோரிக்கை மனுவினை அமைச்சரிடம் வழங்கினார்.

Advertisment

இது குறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்தித்து எமது கரூர் தொகுதியில் விராலிமலை, மணப்பாறை, கிருஷ்ணராயபுரம், கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர் பகுதிகளில் தேவைப்படும் முழு நேர / பகுதி நேர நியாய விலைக் கடைகளின் பட்டியலை அளித்தேன். உடனே எனது கோரிக்கையை ஏற்று, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குத் தேவையான புதிய நியாய விலைக் கடைகளை உடனடியாக உருவாக்க, உத்தரவிட்ட அமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்!" எனத் தெரிவித்துள்ளார்.