Advertisment

கடந்த மாதம் நான்காம் தேதி தர்மபுரியைச் சேர்ந்த 27 வயதுடைய காவலர் துப்பாக்கி குண்டால் அடிபட்டு, முகம் மற்றும் தாடை சிதைந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (07.10.2021) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காவலருக்கு உடனடியாக சிறந்த முறையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களைப் பாராட்டி நலம் விசாரித்தார். மேலும், காவலாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

.