Skip to main content

அமைச்சரின் உதவியாளர் பெயரில் போலி பணி ஆணை வழங்கியவர் கைது

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

    புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு இன்று மதியம் 1.30 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு அவர் பின்னால் சுற்றிவரும்  புதுக்கோட்டை மச்சுவாடி, கண்ணன் நகர் 3 வீதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னேஷ்வரன் மற்றும் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி கார்த்திகேயன் (23) மற்றும் கறம்பக்கடி தாலுகா நரங்கியபட்டு பிரபாகரன் (33) ஆகிய 3 பேரும் டீன் மீனாட்சி சுந்தரத்திடம் சென்று ஒரு பணி நியமன ஆணையை கொடுத்து கார்த்திகேயனுக்கு மருத்துவமனையில் மருந்தாளுநர் பணி வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

a


    அந்த பணிநியமன ஆணையை வாங்கிப் பார்த்த டீன் அந்த மூன்று பேரையும் அமரச் சொல்லிவிட்டு போலிசாருக்கு தகவல் கொடுத்ததுடன் மாவட்ட குற்றப்பிரிவுக்கு ஒரு புகாரும் கொடுத்துள்ளார். அதில் போலியாக எனது கையெழுத்தை போட்டுக் கொண்டு என்னிடமே வந்து வேலைக்காண உத்தரவை கொடுக்கிறார்கள். நான் விசாரித்த வகையில் கார்த்திகேயன் பிரபாகரன் மூலமாக விக்னேஷ்வரன் பழக்கமாகி ரூ. 2 லட்சம் வாங்கிக் கொண்டு விக்னேஷ்வரன் இந்த போலி உத்தரவை கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். 


    கடந்த ஒரு வருடமாக அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னால் சுற்றி வரும் விக்னேஷ்வரன் அமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது செல்போன் உள்பட அனைத்தையும் வைத்துக் கொண்டு அவர் நிழல் போலவே பின்னால் நின்று கொண்டிருப்பவர். மற்றவர்களிடம் தான் அமைச்சர் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு பல்வேறு இடமாறுதல், பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். தற்போது போலியாக டீன் கையெழுத்து போட்டிருப்பது தெரிய வந்ததால் மேலும் விசாரணை செய்தால் பல உத்தரவுகள் வழங்கியதில் சிக்க வாய்ப்புகள் உள்ளதாக காவல் துறையில் கூறுகின்றனர்.


    மேலும் புதுக்கோட்டைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடிக்கு அமைச்சர் முன்னிலையில் சால்வை அணிவித்து அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன், ஆளுநர் புதுகை வந்த போது அவரை பார்க்க பலரும் அனுமதிக்கப்படாத நிலையில் அமைச்சரின் உதவியாளர் என்று சொல்லி ஆளுநருக்கு மலர் கொத்து கொடுத்தார். இந்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. கூடவே சுற்றபவர் என்பதால் மாவட்ட ஆட்சியர் கணேஷ் முன்னிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்குளம் அருகே ஆவின் பூத் அமைக்க உத்தரவு வழங்கியுள்ளார்.
    ஆனால் அமைச்சர் பின்னால் இருக்கும் நபர் என்பதால் அமைச்சரின் பெயருக்கு கலங்கம் எற்படலாம் என்று விசாரனையை இத்துடன் முடித்துக் கொள்ள மேலிடத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


    இது குறித்த அமைச்சர் தரப்பில்.. இந்த விக்னேஷ் அமைச்சரின் உதவியாளர் இல்லை. அதனால் தான் போலிக் கையெழுத்து என்றதும் உடனே அவரை கைது செய்ய போலிசாரிடம் கூறியுள்ளார் அமைச்சர் என்றனர்.


    தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சி சம்பவம், புதுக்கோட்டை சம்பவம் போல பயங்கர பூதங்கள் கிளம்புவதால் ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
                

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.