மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நேரில்தான் நடக்கும், ஆன்லைனில் நடக்காது, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் 4 நாட்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

vijayabaskar

மேலும் அவர், இன்று மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்படும். நாளை முதல் மாணவர்கள் அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மக்களை தீவிரமாக சோதித்து வருகிறோம். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்டவை இருக்கிறதா என்பதை கவனிக்கிறோம். விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்துகிறோம். நிபா வைரஸ் பரவுவதை தடுக்க பழங்களை கழுவி சாப்பிடுங்கள் எனக் கூறினார்.