தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என களத்தில் இறங்கி இருக்கும் நிலையில், 2 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா,மதுரை வந்துள்ளார்.
இன்று (30.01.2021) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த அவரை, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.இன்று மாலை மதுரையில் நடைபெறும் முதல் பொதுக்கூட்ட மேடையில் நட்டா கலந்துகொள்ளவுள்ளார்.நாளை காலை புதுச்சேரி செல்லும் அவர், பாரதியார் சிலைக்குமாலை அணிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மதுரையிலுள்ள தனியார் விடுதியில்தங்கியுள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்புமேற்கொண்டார்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தஅமைச்சர் விஜயபாஸ்கர், ‘இது மரியாதை நிமித்தமாக நடந்தசந்திப்பு’ என்றார்.