கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,

Advertisment

Minister Vijayabaskar interview

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. கேரளா, ஆந்திராபோன்ற அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. சென்னை, சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் வந்தாலும் உயிரிழப்பு இல்லாத நிலையே உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனையில்தான் நடைபெறுகிறது. அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

Advertisment

மேலும் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கூறிய அவர் நாகையில் 580 கிராமில்பிறந்த குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.