Advertisment

தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கரோனா!!! -அமைச்சர் விஜயபாஸ்கர்  

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுதுதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுஅவர் கூறுகையில்,

Advertisment

tamilnadu

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை1,755 லிருந்து 1,821 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 94 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கரோனாவிற்குசிகிச்சை பெற்று வந்த 8 முதுநிலை மருத்துவ மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

Advertisment

இன்று ஒரே நாளில் 38 ஆண்களுக்கும், 28 பெண்களுக்கும் கரோனாபாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாபரிசோதனை மையங்கள் 41 ஆக அதிகரித்துள்ளது. 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைவோர்விகிதம் 52 சதவீதமாக உள்ளது என தெரிவித்தார்.

health minister vijayabasker corona virus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe