minister vijaya bhaskar - corona virus - DMK

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதுவரை தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இவ்வாறு தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர் கட்சிகள் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகின்றன. இதற்கிடையிஸ் கரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை தமிழக அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது; தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம். கேள்வி கேட்பது சுலபம்; களத்தில் இருந்து போராடும்போது தான் அதன் வலி தெரியும்" என தெரிவித்துள்ளார்.