Minister Velumani speech!

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதை அடுத்து நேற்று (08.01.2021) பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நிலையில், சசிகலாஇன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.சென்னையில் இன்று காலைசெய்தியாளர்களைச் சந்தித்தடி.டி.வி.தினகரன்,''அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல்கள்இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள்எம்.எல்.ஏவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுகநிர்வாகியாகக் கூடஇருக்கலாம்.அதிமுக பொதுக் குழுவைக் கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது எனக் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் ''நம்முடையஎதிரி திமுக, நமக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனைதான். அடுத்த முதல்வராக பழனிசாமியே வர வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால் நாம் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றபெற்றால்தான் அனைத்திலும் வெற்றிபெற முடியும். மீண்டும் சொல்கிறேன் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் வெற்றி கிடைக்கும்'' எனஅமைச்சர் வேலுமணிதெரிவித்துள்ளார்.