style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரும் நோக்கத்திலேயே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அதனாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
சிறுபான்மையினரின் நலம் காப்போம் என்றும் எதற்காகவும் இதனை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் வளரக்கப்பட்டுஇப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் செயல்படும் அதிமுகவை எப்போதும் கட்டிக் காப்போம். எம்ஜிஆரின் கொள்கைப்படி மத்தியில்ஆட்சியில் இருப்போருடன் இணக்கமாக இருந்து மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவரும் நோக்கத்திலேயே தற்போது பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.