Advertisment

ஓபிஎஸ் மகனுக்கு சீட்டுக்கேட்ட அமைச்சர் உதயகுமார்!!

uthaiyakumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்,

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மகனான ரவீந்தரநாத்துக்கும் ஒரு சீட்டு கொடுக்க வேண்டும் என ஜெ பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தை நடத்த அவரும் பங்காற்றியுள்ளார் எனவே பேரவை சார்பாக அவருக்கும் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக எங்கள் விருதுநகர் தொகுதியில் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என கூறினார். அதேபோல் துணை முதல்வர் என் மீது வருத்தப் பட்டாலும் சரி தேமுதிகவுடன் 5 முறை கூட்டணி பேச்சு வார்த்தையில் ஓபிஎஸ் இறங்கியுள்ளார். எனவே விரைவில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் எனக் கூறினார்.

admk uthayakumar ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe