புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (படங்கள்)

"எங்கள் முதல்வர் எங்கள் பெருமை70 ஆண்டுக் கால சரித்திர சாட்சியம்" என்ற தலைப்பில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்70வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 28 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று (07.03.2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியைபார்வையிட்டார்.அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

exhibition minister sekar babu mk stalin Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe