Minister Udhayanidhi is the speaker who moved to settle down

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக வசித்து வந்தனர்.

Advertisment

முதலமைச்சர் வசித்து வரும் வீடு அவரது அலுவலகமாகவும் செயல்பட்டு வருவதால் அவரைக் காண்பதற்காக அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சென்னை ஆழ்வார்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டிற்கு வந்து செல்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதும் அவரைக் காண்பதற்கும் அதிகாரிகள் வந்து செல்லும் வண்ணம் இருப்பதால் முதல்வரின் வீடு இருக்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் குடியேற உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி என்ற பங்களா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் உதயநிதி ஸ்டாலின் குடும்பமாக சென்று அந்த பங்களாவில் குடியேறுகிறார். கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அந்த பங்களாவில் குடியிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் வரை சபாநாயகர் அப்பாவு குறிஞ்சி பங்களாவில் குடியிருந்தார் என்பதும் அதன் பின் அவர் அருகில் உள்ள மலரகம் என்ற பங்களாவிற்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.