minister udhayakumar pressmeet at chennai

சென்னை, திருவொற்றியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அதிமுக ஒற்றுமையுடன் இருக்கிறது. ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது; அதிமுக ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் ராமர்- லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகர் தொடர்பாக தொடர் வேண்டுகோள் வைத்து வருகிறோம். கூட்டணிக் கட்சி என்றாலும் அவரவர் கருத்தை சொல்ல எந்த தடையும் இல்லை" என்றார்.

Advertisment