Skip to main content

“கவனக்குறைவால் இனி ஒரு உயிரிழப்புகூட நிகழக்கூடாது..” -விழிப்புணர்வு முகாமில் அமைச்சர் ஆதங்கம்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த முதல் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை மதுரையில் நடந்தது.  

 

minister udhayakumar about disaster management

 

 

அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,   “பருவ காலங்களில் ஏற்படும் பேரிடர் தொடர்மழை, பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட நேரங்களில் மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.  போதிய விழிப்புணர்வு இல்லாமலோ,  கவனக்குறைவாலோ இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதை ஒரு முடிவாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குறும்படம் மற்றும் விளம்பரங்கள்  வாயிலாகவும்  விழிப்புணர்வு  ஏற்படுத்தவிருக்கிறோம்.  

மாணவர்கள் மூலம் நாடகங்கள், மீட்புக் குழுவினர் மூலம் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தமிழரும் தன் குடும்பத்தை, உறவுகளை மட்டுமல்லாது தன்னையும்  தற்காத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு அனைத்துத்துறை அதிகாரிகளாலும் கொடுக்கப்படுகிறது. திருச்சி,  சென்னை,  காஞ்சிபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.  தமிழர்கள் பேரிடரை எதிர்கொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வோடு இருப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. இதை மக்களிடத்தில் கொண்டு செல்வது ஊடகங்களின் பொறுப்பு.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்றைக்கு பின்வாங்க மாட்டோம்”- சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021
"We will never back down from the promises we have made" - the Chief Minister replied in the Assembly

 

சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-2022 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பெட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தின் கடைசி நாளில் நிதியமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் பதிலுரை ஆற்றவுள்ளார்கள். 

 

இந்த சூழலில், இன்று நடைபெற்ற விவாதத்தில் வெள்ளையறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “வெள்ளை அறிக்கை என்பது தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பின்வாங்குவதற்கான முயற்சி என்பதைப்போல உதயகுமார் கருத்து தெரிவித்தார்.

 

நான் நேற்று முன்தினம் 100வது நாள் காணக்கூடிய  இந்த ஆட்சிக்குப் பாராட்டு தெரிவித்துப் பேசினேன். அப்போது ஏற்புரையாற்றிப் பேசும்போது கூடச் சொன்னேன்; எந்த காரணத்தைக் கொண்டும் நாங்கள் அளித்திருக்கிற வாக்குறுதிகளிலிருந்து என்றுமே பின் வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம் விவசாயக் கடன், நகைக் கடன் எல்லாம் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்களே, அதற்கு மழுப்பலான பதில்களைச் சொல்லியுள்ளீர்களே என்று. இதை உறுதியாகச் சொல்கிறேன். வெள்ளை அறிக்கையில் இதுகுறித்து தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய கணக்குப் போட்டுப் பார்க்கையில், அதிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருக்கிறது. அதை எல்லாம் நிச்சயமாக சரிசெய்து அதற்கு பிறகு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருக்கிறோம்.

 

உங்கள் ஆட்சி நடைபெறும் பொழுது நீங்கள் தந்த வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நிறைவேற்றி உள்ளீர்கள். ஆனால் பலவற்றை நிறைவேற்றவில்லை. அதனை நீங்கள் மறந்து விடக் கூடாது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள், தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட்டிற்கு 25ரூபாய்க்கும் தரப்படும் என்று சொன்னீர்கள், தந்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகக் கொடுக்கப்படும் என்று சொன்னீர்கள், யாருக்காவது கொடுத்தீர்களா? குறைந்த விலையிலேயே அவசியமான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தீர்கள், கொடுக்கப்பட்டதா? அனைவருக்கு அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்றீர்கள், அது என்னாச்சு? கோ ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அது கொடுத்தீர்களா?

 

பண்ணை மகளிர் குழு அமைக்கப்படும் என்று கூறினீர்கள், அது எங்கு அமைத்தீர்கள்? அனைத்து பொது இடங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தித் தருவீர்கள் என்று சொன்னீர்கள், எங்கேயாவது ஒரு இடத்தில் காண்பியுங்கள்? டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் அமைக்கப்படும் சொன்னீர்கள், எங்கையாவது அமைத்தீர்களா? பட்டு ஜவுளி பூங்கா உருவாக்குவோம் என்று சொன்னீர்கள், உருவாக்கியுள்ளீர்களா? சென்னையில் மோனோ ரயில் என்று சொன்னீர்கள் ஆனால் கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயிலைத் தான் நிறைவேற்றினீர்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கு. இந்த விவசாய பயிர்க் கடன் மற்றும் நகைக் கடனை பொறுத்தவரைக்கும் எங்கெங்கு முறைகேடுகள் நடந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசுகிற பொழுது நிச்சயமாக அவைகளெல்லாம் ஆதாரங்களோடு உங்களிடத்தில் எடுத்துச் சொல்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிலளித்தார். 

 

 

Next Story

அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டோம்... பேச மாட்டோம்... -ஆர்.பி.உதயகுமார்

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
R. B. Udhaya Kumar

 

 

அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உயர்மட்ட குழு நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம், தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் அதிமுகவில் அறிவிக்கப்படுமா? அதிமுக ஒற்றை தலைமையில் கீழ்தான் இதுவரை தேர்தலை சந்தித்திருக்கிறது. இரட்டை தலைமையை... என்று கேள்வி முடிப்பதற்குள்,

 

''தலைமை இதுகுறித்தெல்லாம் பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக தொண்டர்களில் நானும் ஒருத்தன். தலைமை ஒரு உத்தரவிடுகிறது என்றால் அதற்கு கட்டுப்பட்டால்தானே நான் பதவியில் இருக்க முடியும். மைக் கிடைச்சிருச்சின்னு கண்டதையெல்லாம் பேச முடியாது... அப்புறம் வீட்டுக்குத்தான் நாங்க போகணும். பேச முடியாது. கருத்து சொல்ல முடியாது, கருத்து சொல்லக்கூடாது. அது எல்லையைத் தாண்டியதாக வரும். பேச மாட்டோம், அதைப் பற்றியே பேச மாட்டோம். அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டோம்'' என்றார்.