“அனைவருடைய உணர்வுக்கும் மதிப்பு அளிக்கக்கூடியது தான் தி.மு.க அரசு” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Minister Udayanidhi Stalin at palani murugan conference

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் 2வது நாளான இன்று (25.08.24) விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக சிறப்பு உரையாற்றி னார்.அப்பொழுது அமைச்சர் உதயநிதி பேசும் போது, “இம்மாநாட்டில் கலந்து கொண்டஉணவு மற்றும் உணவு பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் தான் குடியிருப்பார் என்று முதல்வர் கூறுவது உண்மை. கோவிலில் தான் அமைச்சர் சேகர்பாபு குடியிருப்பார் என்று முதல்வர் சொல்வதைப் போல் அவரது அறநிலையத்துறை பணிகள் சிறப்பாக உள்ளது. திடீரென்று இந்த மாநாடு நடப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு அறநிலையத்துறையில்பல சாதனைகளை செய்து தான் இந்த மாநாட்டை நடத்துகிறது.

தி.மு.கவை பொருத்தவரையில் யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காது. அனைவரது உணர்விற்கும் மதிப்பு அளிக்கக்கூடிய அரசாக தி.மு.க திகழ்கிறது. அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலம் தான்கலைஞர் வழியில் நம்முடைய முதல்வர் அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளில் 1400க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 3,800 கோடி மதிப்பில் 8,000 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் கல்வி பயிலும் 4,000 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று மதிய நேர உணவும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் இதுபோன்று அடுக்கடுக்கான பல சாதனைகளை செய்து தான் இந்த மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இது மாநாடாக மட்டுமல்லாது தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்று வருகிறது. தி.மு.க எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள் பாராட்டி வருகிறார்கள். அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் உறுதி” என்று கூறினார்.

pazhani
இதையும் படியுங்கள்
Subscribe