Advertisment

சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Advertisment

இந்த புத்தகக் காட்சியானது இன்று (03.01.2024) முதல் ஜனவரி 21 ஆம் தேதி (21.01.2024) வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும்நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திண்டுக்கல் ஐ.லியோனி, சென்னை மேயர் பிரியா ராஜன், நக்கீரன் ஆசிரியர், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Chennai nakkheeran editor Udhayanidhi Stalin chennai book fair book fair
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe