minister thangamani pressmeet at namakkal

வழக்கு முடியும் வரை உயர்மின் கோபுரம் அமைக்கப்படாது என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Advertisment

நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையத்தில் விவசாயிகள் சங்கத்தினருடன் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, "நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறாது. தொழில் நிறுவனங்கள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மின் திட்டம் கொண்டு வரப்படுகிறது. 800 கிலோவாட் மின் திட்டத்தில் போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

Advertisment

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் ஈசன், "உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கை எதையும் அமைச்சர் ஏற்கவில்லை. உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்திய நிலத்திற்கு போதுமான இழப்பீடு வழங்கவில்லை" என புகார் தெரிவித்தார்.