Thangamani

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் தங்கமணி தலைமைச் செயலகம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, தங்கமணியின் கார் மீது தண்ணீர் லாரி மோதியது. கார் மீது லாரி லேசாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அமைச்சருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் தங்கமணி கார் மட்டுமே லேசாக சேதமடைந்தது.