Advertisment

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்

 Minister of Tamil Nadu welcomed the Vice President

குடியரசு துணைத் தலைவர் 29 ஆம் தேதி காலை 8 மணிக்குகுடும்பத்தினருடன் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் தரிசனம் செய்வதற்கு 2 ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தடைந்தார்.

Advertisment

தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, தமிழகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை தெரிவித்துதமிழகமுதல்வரின் சார்பாகவரவேற்றார். இதனைத்தொடர்ந்து அவருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisment

இதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். கோவில் வாயிலிருந்து கோவிலில் உள்ள 21 படி வரை மின்கல வாகனத்தில் சென்றார். பின்னர் குடும்பத்துடன் கோவில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். துணை குடியரசுத்தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. இவர் வருகையையொட்டி சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் காவல்துறையினர்பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பக்தர்கள் யாரையும் காலை 7:00 மணி முதல் 11 மணி வரை அனுமதிக்கவில்லை. மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக,தரிசனம் செய்வதற்குத்தமிழக அரசு மற்றும் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும்சிறப்பாகப் பணியாற்றியதற்காக குடியரசு துணைத் தலைவர் நன்றி தெரிவித்துச் சென்றார்.

CVGanesan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe