Advertisment

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை முன்னிட்டு, அதன் ஒரு பகுதியாக சென்னையில் 200காய்ச்சல் தடுப்புசிறப்பு முகாம் நடத்தப்படுவதை தொடர்ந்து, சைதாப்பேட்டை திடீர் நகர் அப்துல் ரசாக் தெருவில் ( சைதை ராஜ் திரையரங்கம் அருகில்) நடைபெறும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், மக்கள் நல்வாழ்வு துறை உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்.