Minister Stalin said bjp Trying to change the Constitution

Advertisment

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சமத்துவநாளாக அறிவித்து சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை!

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்” எனக் குறிபிட்டுள்ளார்.

Advertisment