Advertisment

பல்வேறு திட்டப்பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

Advertisment

நேற்று (04-01-2022) நண்பகல், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

அந்த வகையில் 50 லட்சம் மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள கொக்கனேரி ஏரி மேம்பாடு செய்யும் பணி, ஜெயங்கொண்டம் நகராட்சிசெங்குந்தபுரம் சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ஜெயங்கொண்டம் நகராட்சியில்8 வார்டுகளில் மண் சாலைகளை பேவர் பிளாக் சாலைகளாக அமைக்கும் பணி, ஜெயங்கொண்டம் நகராட்சி, பாப்பாங்குளத்தில் பூங்கா அமைக்கும் பணி என பல்வேறு நலத்திட்ட பணிகள் துவங்கி வைக்கப்பட்டது.

இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷிணி, நகராட்சி பொறியாளர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், கழக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி, கட்டிட ஒப்பந்ததாரர்கள் எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளை, ஆர்.கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

minister Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe