seenivasan

காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியான இபிஎஸ் - ஒபிஎஸ் அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

திண்டுக்கல் மாநகரில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் கல்லரை தோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை எட்டு மணிக்கு எல்லாம் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சீனிவாசனோ மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியம். மூன்று நகரம். மற்றும் பேரூர் கழகம் பகுதிகளில் இருந்து எத்தனை பேர் வந்தார்கள் என்பதை ஒவ்வொரு பொறுப்பாளர்களூம் அமைச்சர் சீனியிடம் வந்து சொல்லி விட்டு போய் உண்ணாவிரத பந்தலில் போய் உட்காந்தனர்.

Advertisment

seenivasan 2

இப்படி மாவட்ட அளவில் உள்ள பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் என ஐந்தாயிரம் பேர் வரை இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். அதோடு இந்த போராட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம், கம்பம சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வருகிறார்கள்.