Advertisment

தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் சேரலாம்! அமைச்சர் சீனிவாசன் பேட்டி!!

கொடைக்கானல் பகுதியில் நடந்த அரசு விழாக்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது....

Advertisment

Minister Srinivasan interview

கொடைக்கானல் பகுதியில் வரைமுறை இல்லாத கட்டிடங்களை வரைமுறைப்படுத்துவதற்கான நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடரப்பட்டது. அடிப்படையில் சில கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வரைமுறைப்படுத்துவது தொடர்பாக வணிகர்கள், கட்டிட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தகோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும்விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும்.கொடைக்கானல் மேல்மலை பகுதி மன்னவனூர் கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். சின்னத்தம்பி யானையைகும்கியானையாக மாற்ற வேண்டுமென ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கும்கி யானை ஆக்க வேண்டாம் என மற்றோருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இரு வெவ்வேறு வழக்குகளும் தொடரப்பட்டநிலையில் பாதுகாப்பு நலன் கருதி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அதன்பின் வனவிலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும்.

அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களில் டிடி தினகரனை தவிர வேற யார் வேண்டுமானாலும் தாய் கழகத்திற்கு திரும்பலாம் என்று கூறினார். இந்தபேட்டியின்போது திண்டுக்கல் மாநகர முன்னாள் மேயர் மருதராஜ் உள்பட மாவட்ட,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.

kodaikanal dindugal seenivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe