
தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதிமுகசார்பிலும் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல்லில் வனத்துறைஅமைச்சர் சீனிவாசனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி அமைச்சர் சீனிவாசனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கொட்டப்பட்டிமற்றும் பள்ளப்பட்டியின் பிஷ்மி நகர் ஆகிய திண்டுக்கல்லின்இருவேறு இடங்களில் மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us