Skip to main content

Exclusive: “சி.எம்கிட்ட பேசிட்டார் அமைச்சர். போஸ்டிங் போட 2 லட்ச ரூபாய் லஞ்சம்!” சி.எம் செக்யூரிட்டி ஆஃபிஸர் மனைவியின் ஆடியோ அம்பலம்!

"The minister spoke to CM. 2 lakh rupees bribe to post! ” Audio exposure of CM Security Officer's wife!

     

ஆண் நர்ஸுகளின் பணிநிரந்தரத்துக்காக தலா 4 லட்ச ரூபாய் என 8 கோடி ரூபாய் வசூல்வேட்டை நடத்திக்கொண்டிருக்கும் பிரத்யேக தகவலை நக்கீரன் ஆவணங்களுடன் அம்பலப்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே,  ‘பெண் நர்ஸ் பணியிடத்துக்காக 2 லட்ச ரூபாய்வரை லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கும்.  அமைச்சர்க்கிட்ட பேசிட்டேன்.  அவர், சி.எம்க்கிட்ட பேசிட்டாரு’ என்று முதலமைச்சரின் செக்யூரிட்டி ஆஃபிஸர்  செல்வத்தின் மனைவியும்  தமிழ்நாடு யுனைட்டட்  எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷனின் செயலாளருமான  ஐஸ்வர்யா பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.     

இந்த ஆடியோவில்  திருச்சியைச்சேர்ந்த நர்ஸ் ஏஞ்சல் மேரியின் கணவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஐஸ்வர்யாவிடம் பேசுகிறது ஆண் குரல். அதில், எம்.ஆர்.பி எனப்படும் தமிழ்நாடு மருத்துவ ஆள்சேர்ப்பு வாரியமே தனது கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் பேசுகிறார் ஐஸ்வர்யா. அதுவும், நர்ஸிங் பணியைவிட முழுக்க முழுக்க லஞ்சப்பணம் வசூல்வேட்டையில் இருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். மேலும், அமைச்சருக்கு நெருக்கமானவர் என்றும் கூறுகிறார். இதுகுறித்து, விசாரணை நடத்தினாலே யார் யாரெல்லாம் புரோக்கர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.  அந்த ஆடியோவில் பேசப்படும் உரையாடல் இதுதான்…

 

           

NURSE

 

சி.எம். செக்யூரிட்டியின் மனைவியும் யுனைட்டட்  எம்.ஆர்பி. நர்சஸ் அசோசியேஷன் செயலாளருமான  ஐஸ்வர்யா: ஹலோ

ஏஞ்சல் மேரியின் கணவர் என்று சொல்லும் ஆண் குரல்:  மேடம் வணக்கம் மேடம் சாரி மேடம் கால் கட் ஆகிடுச்சு.

ஐஸ்வர்யா: சொல்லுங்க யாரு?

ஆண் குரல் : திருச்சியிலேர்ந்து பேசுறேன் மேடம்

ஐஸ்வர்யா: சொல்லுங்க

ஆண் குரல் :  வைஃப் பேரு ஏஞ்சல் மேரி மேடம். எம்.ஆர்.பி. செலக்ட் ஆகிட்டாங்க. அதான், முன்னுக்கூட்டியே கொஞ்சம் இடம் வேணும் மேடம். வைஃபோட ப்ரண்டு…

ஐஸ்வர்யா: எங்க வேணும் திருச்சியில?  

ஆண் குரல் :  திருச்சி ஜி.ஹெச் மேடம்

ஐஸ்வர்யா: எனக்கு ஒரு லெட்டர் எழுதிக்கொடுக்கிறீங்களா? பட் ஆனா அமவுண்ட் ஆகுமே பரவாயில்லையா?  அமவுண்டுக்குத்தானே செஞ்சி கொடுக்கிறாங்க.

ஆண் குரல் :  அதுக்காகத்தான் மேடம்.  எவ்ளோ தரணும்னு கால் பண்ணினேன்.

ஐஸ்வர்யா: ஒண்ணேகால் இல்ல ஒன்றரை அந்தமாதிரி ஆகும்

ஆண் குரல் :  அப்டீங்களா

ஐஸ்வர்யா: ம்

ஆண் குரல் :  ஓகே மேடம். எடம் கிடைச்சதுன்னா டிரான்ஸ்ஃபருக்கு எவ்ளோ ஆகும்?

ஐஸ்வர்யா: என்னது புரியல?

ஆண் குரல் :  டிரான்ஸ்ஃபர் பண்ணனும்னா எவ்ளோ மேடம் தேவைப்படும்?

ஐஸ்வர்யா: ஆக்‌ஷுவலா இன்னும் கூட போகும்.  ஸ்ட்ரெயிட்டா போகும்போது போட்டீங்கன்னா இந்த அமவுண்ட் வரும்.  அதுக்கப்புறம் ஒண்ணேமுக்கால் ரெண்டுக்கு  போகும்.

ஆண் குரல் :  ஒண்ணே முக்கால். ரெண்டு ஓகே மேடம்

ஐஸ்வர்யா: ஏன்னா, உங்களமாதிரி  டிஸ்ட்ரிக்ட் டிஸ்ட்ரிக்ட்ல நிறைய பேரு இருப்பாங்க. எல்லாருமே வெயிட் பண்ணுவோம்.  ஆர்டர் வரவும்  மாற்றிக்கலாம்ங்கிற ஐடியாவுலதான் இருப்பாங்க. அப்படிங்குற பட்சத்துல  காம்படிஷன் அதிகமாகிடும்.  ஒரு இடத்த பத்து பேரு கேட்பாங்க.

ஆண் குரல் :  ஓகே மேடம்

ஐஸ்வர்யா: அப்போ, மனி  வந்து (money) இன்கிரீஸ் பண்ணிடுவாங்க.

ஆண் குரல் :  ஓகே மேடம்… அதான் முன்கூட்டியே கிடைக்கும்ங்களா?

ஐஸ்வர்யா:  போடுறப்பவே, நேரடியா அந்த ப்ளேஸ்க்கே வர்ற மாதிரி பண்ணிடலாம். நீங்க அட்வான்ஸ் மட்டும் கொடுத்து வெச்சுட்டு. அதுல 20,000 ரூபாய் வரும். குடுத்துவெச்சிட்டு, ஆர்டர் போட்டு ஒரு காப்பி உங்களுக்கு அனுப்பும் முன்னாடியே,  என் மூலமா பண்ணுனீங்கன்னாவே நானே ஒரு காப்பி உங்களுக்கு தந்துருவேன். ஆர்டர் போட்டு தந்ததுக்கப்புறம் காசை கட்டணும். அப்படி, உங்களுக்கு போட முன்னாடியே வேண்டாம் அப்படின்னு சொன்னீங்கன்னா, ஆனா பிராசஸ் ஆகும்போதே சொல்லிடணும்.  இல்ல… நீங்க கேட்ட இடம் அவங்களுக்கு கம்ஃபோர்ட்டபுளா இல்லங்கன்னா, இந்த இடத்த கொடுக்க முடியலைன்னா அந்த இடத்துக்கு ஆர்டர் போட முடியலைன்னா கொடுத்த அட்வான்ஸை ( 20,000 ரூபாய்) ரீஃபண்ட் பண்ணிடுவாங்க.

ஆண் குரல் :   ஓ… ரிட்டர்ன் பண்ணிடுவாங்க.

ஐஸ்வர்யா: ஆங்… ரிட்டர்ன் பண்ணிடுவாங்க … ம்…

ஆண் குரல் :  ஓகே மேடம்

ஐஸ்வர்யா: இதுதான் புரசிடிங்ஸு

இதுக்கு, கையில எழுதி சும்மா லெட்டர் கொடுத்தாலே போதும். பிரிண்ட் அவுட் மாடல்ல டைப் பண்ணி கொடுக்கணும்.

எனக்கு நீங்க வாட்ஸ்-அப்புல அனுப்பிவிட்டாக்கூட போதும்.  நான், உள்ள விட்டுடுவேன்.

ஆண் குரல் :  ஓகே மேடம் ஓகே

 சார்ட்டக்கூட சொன்னாங்க வீட்டம்மா.  பேரு மறந்துடுச்சு பட்டுனு

ஐஸ்வர்யா: என்னது என்னது

ஆண் குரல் :  சார்கூட ஏதோ பன்றாருன்னு சொன்னாங்க. பேரு தெரில சீதாரமானா

ஐஸ்வர்யா: அப்படியா? அவங்க எல்லோருமே இண்டிஜிவல்ஸ்  ( தனிப்பட்டவர்கள்) புரியுதுங்களா?  உங்களுக்கு  அவங்க எல்லாம் தனி ஆட்கள். சீதாராமன் சாதாரண ஸ்டஃப் நர்ஸு.

ஆண் குரல் :  ஓகே மேடம்

ஐஸ்வர்யா:  இப்போ அவன், ஒருவேளை அவரு காசை திருப்பிக் கொடுக்கலைன்னாலோ ஆர்டர் போடலைன்னாலோ அவனை நீங்க கேட்கமுடியாதில்ல. இப்போ, நாங்கன்னு வெச்சுக்கோங்களேன். அசோசியேஷன் இருக்கு. கவர்ன்மெண்ட் கூட லிங்குல இருக்கிறவங்க. நான், ஒரு லீடரு. இங்கேதான், இருக்கப்போறேன். டோட்டல் எம்.ஆர்.பிக்கு இன்சார்ஜா ஒர்க் பண்ணிக்கிட்டுதான் இருக்கப்போறோம். நாளைக்கே, ஒர்க் ப்ளேஸ்ல  பிரச்சனைன்னாக்கூட எங்களால சால்வ் பண்ணிக் கொடுக்கமுடியும். ஆனா, அவங்கள்லாம் இண்டிஜிவல்ஸ். இண்டிஜிவல்ஸா இருப்பாங்க.  இல்லைன்னா, கவர்ன்மண்டே இல்லாம  பிரைவேட்டா இருப்பாங்க. அப்போ, அவங்களுமே பேப்பரைக் கொண்டுவந்து எங்கக்கிட்டதான் கொடுப்பாங்க.

 

கொடுத்து எங்கக்கிட்ட போட்டுத்தரச் சொல்லுவாங்க.

சீதாராமன் பிரதர் பாதி எங்கிட்டதான் கொண்டுவருவாரு.

செந்தில்நாதன் பாதி எங்கிட்டதான் கொண்டுவருவாரு.

அப்போ, அவங்க கொஞ்சம் கூட காசு வெச்சு ஒண்ணே முக்கா ரெண்டுக்கு  முடிச்சுத்தருவாங்க.  

நீங்க கேளுங்களேன். செந்தில்நாதன்கிட்டயோ யாராச்சும்  பேப்பர் போடுறாங்கன்னா ரேட்டு கேளுங்க. ரெண்டு சொல்வாப்லையாக்கும். ஏன்னா, அவங்களால நேரடியா பண்ணமுடியாது. யார்க்கிட்டயாவது குடுத்து பண்ணுவாங்க.

ஆண் குரல் :  அதான், நம்பர் கொடுத்தாங்க மேடம். அதுக்குதான் ஃபோன் பண்ணினேன். வைஃப் வேற போன் பண்ணு போன் பண்ணு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

ஐஸ்வர்யா:  நீங்க யோசிச்சுங்க. பட், இதுதான் விசயம்.

ஆண் குரல் :  நம்பர் கொடுத்தாங்க. ஐஸ்வர்யா மேடம்தான் பேசுறதான்னு கொஞ்சம் டவுட் ஆகிடுச்சு. அதனாலதான், கேட்டேன் திரும்ப.

ஐஸ்வர்யா: அப்படியா? இல்லல்ல… நான் தான் பேசுறேன்.

ஆண் குரல் :  ஓகே மேம் தேங்க்ஸ் மேடம்.  ஓகே நான் அப்போ…

ஐஸ்வர்யா: அவங்க பேரு ஏஞ்சல்ஸ் மேரியா? எம்.ஆர்.பி. நம்பர் என்ன? ரேங்க் என்ன?

ஆண் குரல் :   என்ன மேடம்?

ஐஸ்வர்யா: எம்.ஆர்.பி ரேங்க்  எத்தனாவது இருக்காங்க ரேங்க் லிஸ்டுல?

ஆண் குரல் :  காலையில மெசேஜ் அனுப்புறேன்னு சொல்லியிருக்காங்க மேடம் வீட்டம்மா.

ஐஸ்வர்யா: ஓ… அவங்க எம். ஆர்.பி ரேங்க் என்னன்னு உங்களுக்கு தெரியலையா?

ஆண் குரல் :  தெரியல மேடம்.

ஐஸ்வர்யா: சில சமையம் ப்ளேஸே வரக்கூடிய வாய்ப்பு இருக்கு. அக்கார்டிங் டூ எம்.ஆர்.பி ரேங்தான்.

ஆண் குரல் :   ஓகே மேடம்

ஐஸ்வர்யா:  இப்படியே சொன்னீங்கன்னாக்கூட

ப்ளேஸ் திருச்சியில கிடைச்சுதுன்னா… சொல்லமுடியாதில்ல.

ஆண் குரல் :  அவங்களுக்கு கொஞ்சம் கன்ஃபியூஷன் இருந்துச்சு. டைரக்டா பன்றாங்களா?  எப்படி?

ஐஸ்வர்யா:  டைரக்ட்டுன்னா இன்னும் ரெண்டு மூணு நாள்ல லிஸ்ட் வந்துடும். ஆர்டர் பிரிப்பேர் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் இன்னைக்குத்தான் போயி பேசிட்டு வந்திருக்குது  அமைச்சர்க்கிட்ட. அவரு, சி.எம்கிட்ட பேசிட்டாப்பல. ஓகே சொல்லிட்டாரு.  ஃபங்ஷனா  வெச்சு மொத்தமா அத்தனைப்பேரையும்தான் உள்ளதான் வரசொல்லப்போறாங்க. அந்த, 2500 பேரையும் நாங்கதான் ……………….. பண்ணப்போறோம்.

ஆண் குரல் :  ஓகே மேடம்

 மேடம்… நீங்க ஒர்க்கு, சென்னையில இருக்கீங்களா?

ஐஸ்வர்யா:  ஆமா, நாங்க  சென்னைதான். 2500 பேரு வர்றீங்கன்னா, அவங்க எல்லாரையும் டி.எம்.எஸ்ஸுக்கு கூட்டிக்கிட்டு வந்து. மொத்தமா நாங்கதான் கூட்டிக்கிட்டுப்போவோம்.

ஆண் குரல் :  ஓகே மேடம்… நீங்க ஹாஸ்பிட்டல்ல

ஐஸ்வர்யா: அன்னைக்கு,  நீங்க ஃபங்ஷன் வந்தாக்கூடா என்னைய பார்க்கலாம்.

ஆண் குரல் :  ஓகே மேடம். வந்துடுறேன் மேடம். எந்த இடத்துல மேடம் ஒர்க் பன்றீங்க? நேராகூட வந்து பார்த்துடலாம்.

ஐஸ்வர்யா: நானா, நான் டிஸ்பெஞ்சரி. என்னை ஜாப்புல நீங்க பார்க்கவே முடியாது. அங்கங்க போற வேலைதான் பார்ப்பேன்.

ஆண் குரல் :  அப்படீங்களா?

ஐஸ்வர்யா: அதுதான் சொல்றேன்ல.  எம்.ஆர்.பி  இருக்காங்கள்ல? எம்.ஆர்.பியில இருக்கிறவங்க எல்லாத்துக்கும் சேர்த்து அசோசியேஷன் தான். அசோசியேஷன் ஸ்டேட் செகரட்டரி. அதனால,  

ரெகுலர் பையன்களுக்கு ஆர்டர்  போட்டுக்கிட்டிருக்கேன்.

உங்க வேலை மட்டுமில்லல்ல.

எல்லா வேலையும் நாங்க பார்ப்போம்.

எட்டாயிரத்துக்கு மேல இருக்கிறவங்கள வெளியில போகச்சொல்லியிருக்காங்க. கேஸ் நடத்துறோம்.  

ஆண் குரல் :  வைஃபோட ஃப்ரெண்ட்ஸ் சொல்லிக்கிட்டாங்களாம். அமைச்சருக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க. கரெக்டா பண்ணிக்கொடுப்பாங்கன்னு சொன்னாங்களாம்.

ஐஸ்வர்யா:  ஆமாம். ஆல்ரெடி எம்.ஆர்.பியா இருக்காங்க பார்த்தீங்களா? ஸ்டாஃப் நர்ஸு. அவங்கக்கிட்ட விசாரிச்சீங்கன்னாவே சொல்லுவாங்க.

ஆண் குரல் :  அதான் மேம்.  டைரக்டா பண்ணுவீங்கன்னு சொல்லித்தான் நம்பர் வாங்கி ஃபோன் அடிச்சேன்.

ஐஸ்வர்யா:  உங்களுக்கு எதுவும் பயம் கிடையாது. ஏன்னா, என் ஹஸ்பண்டே  சி.எம் ஆஃபிஸ்தான்.

ஆண் குரல் :  சி.எம். ஆஃபிஸுல ஒர்க் பன்றாருங்களா

ஐஸ்வர்யா: ஆமாம், சி.எம் ஆஃபிஸுலதான் ஸ்குவார்டு

ஆண் குரல் :  ஏன்னா உங்கள நான் பார்த்தது கிடையாது. அதனாலதான், சரி…

 

NURSE

                           அமைச்சருடன் சி.எம்.செக்யூரிட்டி ஆஃபிஸர் செல்வத்தின் மனைவி ஐஸ்வர்யா

 

ஐஸ்வர்யா: ஆமாம், அதுதான் சொல்றேன். ஆக்சுவலா சொல்றீங்கள்ல்ல. நீங்க பார்க்காட்டி.  யாராவது ஒரு இண்டிஜிவல். கவர்ன்மெண்ட் ஒரு           ஃபங்‌ஷன்  வெச்சா.  நர்ஸிங் என்ன பிரச்சனைன்னாலும் முன்னாடி வந்து நிற்கப்போறோம். யார்க்கிட்ட என்னைய பற்றி கேட்டாலும்  தெரியும். டி.எம்.எஸ்ஸுல கேட்டாலும் என்னைய தெரியும். மினிஸ்டர் ஆஃபிஸ்ல கேட்டாலும் தெரியும். நர்ஸிங் சம்பந்தமா எங்க கேட்டாலும் என்னைய தெரியும். அதுக்காக, சொல்றேங்க.

ஆண் குரல் :  ஓகே மேடம்

 சாரு, பெரிய போஸ்டுங்களா?

ஐஸ்வர்யா:  புரியல  என்னது?

ஆண் குரல் :  நம்ப சாரு, சி.எம்க்கிட்ட இருக்கிறாருன்னு சொன்னீங்களே.

ஐஸ்வர்யா:  ஆமாம்.  ஆக்சுவலா  டென் இயர்ஸா இருக்காங்க.

ஆண் குரல் :  ஓ.கே. தேங்க்யூ மேடம்

ஐஸ்வர்யா: அவுங்க எஸ்.பி.சி.ஐ.டி

ஆண் குரல் :   அதான் மேடம்… ஒரு கான்ஃபிடண்டுக்காக கேட்கிறேன் மேடம் வேற ஒண்ணுமில்ல.

ஐஸ்வர்யா: இல்ல இல்ல… ஆக்சுவலா என்கிட்ட பேசுறதைவிட எம்.ஆர்பி ஸ்டாஃபா ஒர்க் பண்ணுவாங்கல்ல.

ஆமா

அவங்ககிட்ட விசாரிங்கன்னாவே தெரிஞ்சிரும். அது உங்களுக்கு காஃபிடண்டா இருக்குமில்ல.

இப்போ, மட்டுமில்ல. அவங்க ஜாயிண்ட் பன்றதிலிருந்து எல்லா ஒர்க்கையும் நாங்கதான் பார்க்கிறோம்.

இப்போ, அவங்க வர்றாங்கல்ல. ஆர்டர் வாங்குறதுக்கு. அதுக்கே, நாங்க சி.எம்முக்கு தேங்ஸ் பன்றது.  எல்லாமே நாங்கதான் செய்வோம்.

ஆண் குரல் :  செந்தில்நாதன் சார் எல்லாம்  பன்றதா சொன்னாங்க மேடம்.

ஐஸ்வர்யா:  இல்ல இல்ல அவருக்கும் இதுக்கு சம்பந்தமே இல்லங்க.  அதுதான், உண்மை.

உண்மை அதுதான்.  அவருக்கும் இதுக்கும் சுத்தமா ஒரு துளிகூட சம்பந்தம் கிடையாது.

அதான் சொல்றேனே,  அவர் வேணும்னா பேப்பரை எங்கிட்ட கொண்டுவந்துதான் பண்ணமுடியும்.

ஆண் குரல் :  அப்படிங்களா?

கேள்விப்பட்டேன். அவுங்க சொன்னாங்க. வீட்டம்மா

ஐஸ்வர்யா:  கொஞ்சம் நல்லா உன்னிப்பா கவனிச்சீங்கன்னா. அது, உங்களுக்கு தெரியும்.  ஸ்ட்ரெயிட்டாதான் மெம்பர்ஸை கூப்பிட்டு போடப்போறாங்கன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கணும் இல்லையா? சொல்லிருக்க மாட்டாரு.  ஏன்னா அவருக்கு தெரியாது.

ஆக்சுவலா அவங்களுக்கும்  கவர்ன்மெண்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லைங்க.

ஆண் குரல் :  அதான், மேடம். கன்ஃபார்ம் பண்ணிக்கதான் மேடம் ஃபோன் பண்ணுன்னு சொன்னாங்க வீட்டம்மா.

ஐஸ்வர்யா: அவங்க சைடு நெறைய கன்ஃபியூஸன் இருக்கு.

ஜாயிண்ட் பண்ணின நிறைய பேருக்கு போஸ்டிங் வாங்கித்தர்றேன்னு சொல்லிட்டு மனியை ஏதோ பண்ணிட்டாப்லன்னு  நிறைய கம்ப்ளைண்டு இருக்கு.

ஆண் குரல் :   ஓகே மேடம்

கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டா பைசா கொஞ்சம் ரெடி பண்ணிக்கலாம்னு கேட்டேன்

ஐஸ்வர்யா: இதுதான். வந்துடும் ஆர்டர் கொஞ்ச நாளு

ஆண் குரல் :  அட்வான்ஸு எவ்ளோ தரணும்னு சொன்னீங்க?

ஐஸ்வர்யா:  20,000 ரூபாய்தான். அதுவும், உங்களுக்கு ரிட்டர்ன் அமவுண்ட்தான்.

இந்த டுவெண்டி  தவுசன்ட் நான் உங்களுக்கு ரெஸ்பான்ஸ்பிலிட்டி. ஆர்டர் போடலைன்னா ரிட்டர்ன் பன்றதுக்கு நான் ரெஸ்பான்ஸ் எடுத்துப்பேன். ப்ரூஃபோடதான்  வாங்குவாங்க.  மனி கொடுக்கணும்னா, ஆர்டர் போட்டதுக்கப்புறம் அடுத்து மனிய  பற்றி பேசுவாங்க.

ஆண் குரல் :   சாருக்கு ஃபோன் பண்ணலாமா? இங்க போன் பண்ணலாமான்னு கேட்டுக்கலாம்னுதான்.

ஐஸ்வர்யா:  ஏன் அவங்களையே பேசச்சொல்லவேண்டிதானே?

திருச்சி டிஸ்ட்ரிக்ட்ல அவங்களுக்கு ஜாயிண்ட் பன்றதுக்கு என்ன ப்ளேஸ் வேணும்னு சொல்லுங்க. எங்க அசோசியேஷன்  காரங்க.  அங்க இருப்பாங்க.  எல்லா டிஸ்ட்ரிக்லேயும் நாங்க வெச்சிருக்கோம்.

எந்த டி.டி. ஆஃபிஸ் போகணும். என்னா பண்ணணும்? என்ன புரசிடிங்ஸு?  எல்லா டிஸ்ட்ரில்க்லேயும் ஒரு இன்சார்ஜ் வெச்சிருப்போம்.

எல்லாரையும் கெய்டு பன்றதுக்காக.

32 டிஸ்ட்ரிக்லேயும் 32 பேரும் நிற்பாங்க.

 

ஆண் குரல் :  ஓகே மேடம்.  செந்தில்நாதன் சாருக்கு ஃபோன் எதுவும் பண்ணத்தேவையில்லீங்களா?

 

ஐஸ்வர்யா:  புரியல என்னது?

ஆண் குரல் :  மற்றவங்க யாருக்கு ஃபோன் பண்ணத்தேவையில்லையா?

கன்ஃபார்மா பண்ணிக்கொடுத்துடுவீங்கல்ல?

ஐஸ்வர்யா:  இல்ல… ஆக்சுவலா வந்து என்னைய வந்து வெளியில விசாரிச்சீங்கன்னா, உங்களுக்கு தெரியும் என்னன்றது.

ஆண் குரல் :   விசாரிச்சுக்கிறேன் மேடம்

டைரக்டா பேசுறேனே.  அப்புறம், எதுக்கு மத்தவங்கள கேட்டுக்கிட்டு

 

ஐஸ்வர்யா: எம்.ஆர்.பி இருக்காங்கல்ல .  அவங்கக்கிட்ட் விசாரிச்சாலே  தெரிஞ்சுடும்.

ஓகே மேடம் மனி அனுப்பணும்னா எப்படி மேடம்?

ஆண் குரல் :  அக்கவுண்ட் நம்பரா? டைரக்டா மேடம்?

ஐஸ்வர்யா: அக்கவுண்ட் நம்பர்தான்.  20,000  ப்ரூஃபோடதான். அது, என் அக்கவுண்டுக்கு வராது. அங்கதான் போகும்.  ரெசிப்டை நீங்க கையில வெச்சுக்கிட்டீங்கன்னா  வாட்ஸ்-அப்புல  ஃபோட்டோ எடுத்து அனுப்பிச்சு விட்டுடுங்க.

ஆண் குரல் :   நம்பர் மேடம்

ஐஸ்வர்யா:  என்னோட இந்த நம்பர்தான்

ஆண் குரல் :  கால் நம்பர் கேட்கல.  அக்கவுண்ட் நம்பர் கேட்டேன் மேடம். ரெடி பண்ணிட்டன்னா

ஐஸ்வர்யா: அக்கவுண்ட் நம்பர் அவங்கக்கிட்ட கேட்டுதான் வாங்கித்தர முடியும்.

வாட்ஸ்ப்புல மெசேஜ் போடுங்க. கேட்டு வாங்கித்தர்றேன்.

ஆண் குரல் :  ஓகே மேடம்  ஓகே மேடம் தேங்க்ஸ் மேடம்

ஐஸ்வர்யா: நான் கேட்டுத்தான் வாங்கித்தரணும்.

நீங்க பேசிட்டு என்னங்கிறதை சொல்லுங்க.

ஆண் குரல் :  கண்டிப்பா கண்டிப்பா மேடம்

ஐஸ்வர்யா: ஆக்சுவலா எங்க அசோசியேஷன்லிருந்து மெம்பர்ஷிப் போடுவோம். எப்போ,  சி.எம்  ஃபங்ஷன் நடக்குதில்லையா? அன்னைக்கு எல்லாருமே  எங்க டீம் அங்கதான் இருப்போம்,  டோட்டலா.  அங்கேயே, மெம்பர்ஷிப்புக்காக ஃபார்ம் கொடுக்கிறது.  இவங்கள கெய்டு பன்றது.  எல்லாவேலையும் நாங்க அப்பவே பண்ணிடுவோம்.

ஆண் குரல் :  ஓகே ஓகே மேடம்

ஐஸ்வர்யா:  அவங்க வாட்ஸ் அப் குரூப்புல இல்லையா?

ஆண் குரல் :  நம்பர் ஃப்ரெண்ட் குடுத்தார்ன்னு சொல்லி கால் பண்ணி டீடெய்ல் கேட்டுக்க சொன்னாங்க.

ஐஸ்வர்யா:  அவங்களையே கால் பண்ண சொல்லுங்க.

அவங்க, ஸ்டஃப் நர்ஸுதானே

வேலைக்கு சேரப்போறாங்க. இன்னமும் ஏன் இப்படி இருக்கணும். நாலு விஷயம் தெரிஞ்சிக்கவேண்டாமா? (மெல்லிய சிரிப்பு)  

ஆண் குரல் :  டீடெய்லா கேட்கசொன்னாங்க அதான் மேடம்.

ஐஸ்வர்யா: நிறைய நேரம்  ஃபோன் அட்டெண்ட் பண்ணமுடியாது.

நான் வெளியில இருந்தன்னா.

உங்க வாட்ஸ்-அப்புல மெசேஜ் போட்டுவிடச்சொல்லுங்க.

எப்போ வேணாலும்

ஆண் குரல் :   அதான் மேடம்.  அமவுண்ட்டுக்காதான் கால் பண்ணினேன் மேடம்.  எவ்ளோ,  ஆகும்னு கேட்டுக்கலாம்னு சொல்லிக்கிட்டு

ஐஸ்வர்யா: இந்த ரேஞ்சுதான் ஆகும்

ஆண் குரல் :   ஓகே மேடம் ஓகே மேடம்

ஐஸ்வர்யா:  ம் சரி

ஆண் குரல் :   ஓகே ரொம்ப தேங்க்ஸ் மேடம்

ஐஸ்வர்யா:  ம்

இப்படித்தான் ஃபோன் உரையாடல் முடிகிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்