Advertisment

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி வாட்ஸ்அப் அவதூறு... திமுக நிர்வாகி கைது...!

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தி.மு.க. மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்த வேலையும் செய்வதில்லை என வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பியதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த கவுதம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Advertisment

Minister SB Velumani issue - DMK  Personality arrested

புகாரை வாங்கிய ராமநாதபுரம் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு, முருகனை அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். இதை அறிந்த தி.மு.க.வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவற்றை கண்டுகொள்ளாத காவல்துறையினர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் இரவோடு இரவாக அவரை அடைத்தனர்.

whatsapp s.p.velumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe