Skip to main content

சிறுவானி குடிநீர் விநியோகம் குறித்து தவறான விமர்சனம்... பூச்சாண்டி காட்டி ஒன்றும் செய்யமுடியாது- எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

கோவையில் நிறைவேற்றப்பட உள்ள 24 மணி நேர சிறுவானி குடிநீர் விநியோகம் குறித்து தவறான விமர்சனங்கள் பரப்பப்படுவதாகவும், பூச்சாண்டி காட்டி தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

3.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட கோவை காந்தி பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.தொடர்ந்து அங்கு புணரமைக்கப்பட்டுள்ள நீச்சள் குளம், புதிதாக  அமைக்கப்பட்டுள்ள வெள்ளி நீரூற்று, மூலிகை தோட்டம், யோகா மையம், வயதானவர்கள் ஓய்வு பெறும் இடம், மற்றும் திறந்த நிலை அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,5.25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு நூற்றாண்டுகள் கடந்த இந்த பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பூங்கா புணரமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

minister sp velumani interview

 

தொண்டாமுத்தூர் தொகுதியில் சிட்கோ அமைக்கப்பட்டு வருவதாகவும், கோவையில் அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு பாலப்பணிகள் நிறைவடைந்தும் சில பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லாத வகையில் பில்லூர் 3 வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் உக்கடம் குளத்தில் படகு சவாரி துவங்கப்பட உள்ளதாகவும் கூறினார். கோவையில் விரைவில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் சூயஸ் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் நிலையில் அது குறித்து பல விமர்சனங்கள் வருவதாக சுட்டிக்கட்டிய அமைச்சர் வேலுமணி, கடந்த  2008 ம் ஆண்டில் தீர்மானம் போட்டு திமுக அதனை கொண்டுவர முயற்சித்ததாகவும் அவர்களால் முடியாத நிலையில் தற்போது நாம் நிறைவேற்றியுள்ளதால் அதனை விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், தவறான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதாகவும் சிறுவானி அடகு வைக்கப்படவில்லை பராமரிப்பு மட்டுமே செய்ய மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தவறான விமர்சனங்கள் மூலம்  பூச்சாண்டி காட்டி தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும், தான் பதவியில் உள்ளவரை என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அத்தனையும் கொண்டுவருவேன் எனவும் உறுதியளித்தார். கோவை விமானநிலைய விரிவாக்கம் பணி நிறைவடைய உள்ளது எனவும் கோவைக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள சூழலில் மேலும் தேவையான அனைத்தும் செய்து தருவோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் புணரமைக்கப்பட்டுள்ள பூங்காவை அனைவரும் ஒன்றிணைந்து நன்றாக பராமரிக்க வேண்டும் எனவும் பராமரிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.